பூட்டியிருந்த வீட்டை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள முத்தாண்டிகுப்பம் பகுதியில் செல்வமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பணி காரணத்தினால் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இதனை அடுத்து முத்தாண்டிக்குப்பம் பகுதியில் இருந்த இவரது வீட்டை காலை நேரத்தில் அக்கம்பக்கத்தினர் பார்த்த போது கதவு உடைந்து திறந்து கிடந்ததை கண்டு […]
