கடலூர் மாவட்டத்தில் உள்ள குயிலாபாளையம் பகுதியில் கரும்பு வெட்டும் தொழிலாளியான பாலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனது. அதே பகுதியை சேர்ந்த தம்பதியினர் வண்ணாரப்பேட்டை பகுதியில் தங்கியிருந்து கரும்பு வெட்டும் வேலை செய்து வந்தனர். அவர்களுக்கு 13 வயதில் மகள் இருக்கிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு சிறுமியின் தந்தை 4 ஆயிரம் ரூபாய் பணத்தை கையில் வைத்துக்கொண்டு கடைக்கு சென்றுள்ளார். அப்போது பாலு சிறுமியிடம், உனது தந்தை மது குடிப்பதற்கு பணத்துடன் செல்கிறார்; […]
