சாலையோரத்தில் இருந்த கடைகளை காவல்துறையினர் அகற்றினார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் பஜார் பகுதியில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் சாலையோர கடைகளை அகற்றுவதற்கும், சாலையை ஆக்கிரமித்து உள்ள கடைகளில் முகப்புகள் அகற்றுவதற்கும் நகராட்சி நிர்வாகம் சார்பாக ஆலோசனை கூட்டம் நடத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு தெரிவித்தனர். இந்நிலையில் நகராட்சி கமிஷனர் தாமோதரன் மற்றும் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் ஏராளமான காவல்துறையினர் சாலையோரத்தில் இருந்த நடைபாதை கடைகள் மற்றும் கடைகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளனர். இதனை […]
