வருகிற 2020ஆம் ஆண்டு தமிழ்நாட்டில், தமிழ்நாடு சடுகுடு பிரீமியர் லீக் தொடரை நடத்தவிருப்பதாகத் தமிழ்நாடு கபடி விளையாட்டு சங்கம் தெரிவித்துள்ளது. புரோ கபடி போட்டிகளைப் போலவே உள்ளூர் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாட்டில் வருகிற 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு சடுகுடு பிரீமியர் போட்டிகளை நடத்த, தமிழ்நாடு கபடி சங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கான கூட்டம் திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு கபடி சங்கத்தின் தலைவர் முத்துசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த […]
