புதுவை காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜான்குமார் வெற்றி பெற்றார். புதுச்சேரியில் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 21_ஆம் தேதி நடைபெற்று அதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் போட்டியிட்டு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக கூட்டணி என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளரை விட 7,170 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதை அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.இதனிடையே புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் […]
