அப்பாவி மக்களைக் காப்பாற்றாமல் தவறு செய்பவர்களை காப்பாற்றுகிறாரா தமிழக முதல்வர் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிஸ் மரணம் இந்திய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மீது களங்கத்தை ஏற்படுத்தியதாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில்தான் தற்போது காவல்துறை மிரட்டலுக்கு பயந்து எட்டையபுரத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரும் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
