பெங்களூரு: பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரை சிறப்பு புலனாய்வு பிரிவினர் ஜார்கண்டில் கைது செய்தனர். கடந்த 2017 செப்.5 ஆம் தேதி, பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ், பெங்களுரு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள அவரது வீட்டின் வாசலில் அடையாளம் தெரியாக நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கிய சிறப்பு புலனாய்வு பிரிவுனர், கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக கருதப்பட்ட 16 நபர்களை அதிரடியாக கைது செய்தனர். மேலும், கொலையில் தொடர்புடைய […]
