நாளை முதல் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டுவரப்படும் என்று சட்ட பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க ரயில் மூலம் ஜோலார் பேட்டையிலிருந்து குடிநீர் கொண்டு வருவதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. இத்திட்டத்திற்காக ரூ65 கோடி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில்,மூன்று கட்டங்களாக பணி நடைபெற்று வந்த நிலையில், ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் ஜோலார் பேட்டை ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு ரயில் தொட்டிகளில் நிரப்பப்பட்டது. இதனை தொடர்ந்து ரயில் புறப்பட தயாராகி […]
