Categories
தேசிய செய்திகள்

”எல்லாம் உங்க ஆதரவோடு நடந்த கொடூரம்” புது குண்டை தூக்கிப் போட்ட சித்தராமைய்யா …!!

டெல்லி ஜே.என்.யு.வில் நடைபெற்ற தாக்குதல் அரசின் ஆதரவுடன் நடைபெற்ற ஒன்று என சித்தராமைய்யா குற்றஞ்சாட்டினார். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது முகமூடி அணிந்திருந்த நபர்கள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதல் குறித்து கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமைய்யா கூறுகையில், “அண்மையில் ஜே.என்.யு.வில் நடத்தப்பட்ட தாக்குதல் அரசாங்கத்தின் ஆதரவுடன் நடத்தப்பட்ட ஒன்று. குற்றவாளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். வன்முறையில் காயமடைந்தவர்களுக்கு எதிராகவே காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ், பாஜக மாணவர் அமைப்புகளுக்கிடையே மோதல்!

ஜே.என்.யூ. தாக்குதலைத் தொடர்ந்து, பாஜக மாணவர் அமைப்பு, காங்கிரஸ் மாணவர் அமைப்பு ஆகியவைக்கு இடையே குஜராத்தில் மோதல் வெடித்துள்ளது. ஜே.என்.யூ. தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பாஜக மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தைச் (ஏ.பி.வி.பி.) சேர்ந்தவர்களுக்கும் காங்கிரஸ் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்க உறுப்பினர்களுக்கும் மோதல் வெடித்துள்ளது. முன்னதாக, காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் ஜே.என்.யூ. தாக்குதல் சம்பவத்திற்கு காரணம் ஏ.பி.வி.பி. எனக் குற்றஞ்சாட்டி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா பேட்டி

ஜேஎன்யு மாணவர்கள் போராட்டத்தில் இணைந்த பாலிவுட் பிரபலங்கள்.!!

ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து இந்தியா கேட் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் இணைந்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஆசியர்கள் பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அங்கு முகமூடி அணிந்து ஊடுருவிய அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மாணவர்கள், பேராசிரியர்களைச் சரமாரியாகத் தாக்கினர். இரும்புக் கம்பிகள், கம்புகளைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மாணவர்கள், பேராசிரியர்கள் பலர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடாளுமன்றம் நோக்கி படையெடுத்த டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள்..!

400 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டிருக்கும் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜே.என்.யூ. மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்றனர். பல்கலைக்கழக விடுதிக் கட்டண உயர்வைக் கண்டித்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (JNU) மாணவர்கள், கடந்த மூன்று வாரத்திற்கும் மேலாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 400 விழுக்காடு உரை உயர்த்தப்பட்டிருக்கும் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் […]

Categories

Tech |