டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி, பல்கலைக்கழக வளாகத்தில், ஆசிரியர்களும், மாணவர்களும் இணைந்து, மனித சங்கிலி பேரணி நடத்தினர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி மாலை, உருட்டுக் கட்டைகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் திடீரென புகுந்த முகமூடி அணிந்த கும்பல், மாணவர்கள் மீதும், ஆசிரியர்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. இந்த கொடூர தாக்குதலில், 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியரும், ஆசிரியர்களும் படுகாயமடைந்தனர். பல்கலைக்கழக நிர்வாக நிர்வாகத்தின் […]
