Categories
தேசிய செய்திகள்

மோசமான நிலையில் நண்பரின் உயிர்…. 1400 கி.மீ ஆக்சிஜனுடன் சிலிண்டருடன் காரில் பறந்த ஆசிரியர்…. இறுதியில் நேர்ந்த நெகிழ்ச்சியான சம்பவம்….!!

நண்பரின் உயிரை காப்பாற்றுவதற்காக ஆசிரியர் ஒருவர் 1400 கிலோமீட்டர் கடந்த ஆக்சிஜன் சிலிண்டரை கொண்டு வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் பகோரா மாவட்டத்தில் தேவேந்திர என்ற ஆசிரியர் வசித்து வருகிறார். இவருடைய நண்பர் ரஞ்சன் அகர்வால் என்பவர் டெல்லியில் உள்ள நொய்டாவில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திடீரென்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் ஆக்சிஜன் கிடைக்காததால் அவருடைய உடல்நிலை திடீரென்று மோசமானது. அதனால் […]

Categories
தேசிய செய்திகள்

மொபைல் தேவையில்லை….. “வீட்டு வாசலில் கல்வி”….. சமூக இடைவெளியுடன்….. கிராமம் முழுக்க வகுப்பறைகள்….!!

ஜார்கண்ட் மாநிலத்தில்ஆன்லைன் மூலம் கல்வி கற்க முடியாத மாணவர்களுக்காக பள்ளி ஆசிரியர் ஒருவர் செய்த செயல் பெருமளவில் பாராட்டைப் பெற்றுத் தந்துள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு உத்தரவானது தளர்வுகளுடன் நாடு முழுவதும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல்வேறு செயல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட போதிலும், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவை […]

Categories
தேசிய செய்திகள்

இரவில் நீண்ட நேரம்… கணவரிடம் பேசிவிட்டு தூங்க சென்ற பெண்… பின் காலை பெற்றோர் அறையில் கண்ட அதிர்ச்சி..!!

ஜார்க்கண்டில் கணவருடன் பேசிவிட்டு பின் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தியா தேவி என்ற பெண்ணுக்கும் இளைஞர் ஒருவருக்கும் திருமணமாகி ஓராண்டு நிறைவு பெற இருக்கிறது.. திருமணமான சில மாதங்களிலேயே கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.. இதனால் சில மாதங்களுக்கு முன்பு தான் மனைவி தியாவை அவரது தாய் வீட்டில் கொண்டு சென்று விட்டுள்ளார் கணவர்.. இதனை விரும்பாத தியா மிகுந்த மன வேதனையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனவால் முதல் பலி!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனா வைரசால் முதல் பலி ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 540 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 5,734 ஆக உயர்ந்துள்ளது. இதில் 473 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 17 பேர் பலியாகியுள்ள நிலையில், கொரோனா பலி எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது. தினமும் கொரோனவால் உயிரிழப்பு நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதுவரை ஜார்கண்ட் […]

Categories
தேசிய செய்திகள்

காந்தி சிலையை அடித்து நொறுக்கிய கும்பல்…. தேடுதல் வேட்டையில் போலீசார்..!!

ஜார்கண்ட்டில் மர்மநபர்கள் காந்தி சிலையை அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹஸாரிபாக் என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி சிலையை சமூக விரோதிகள் சிலர் அடித்து நொறுக்கி சுக்கல் சுக்கலாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து போய் உடனே  காவல்துறையிடம் புகார் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுடன் சத்துணவு சாப்பிட்ட கல்வியமைச்சர் …!!

ஜார்க்கண்ட் மாநில கல்வியமைச்சர் ஜகர்நாத் மஹத்தோ, மாணவர்களுடன் மாணவராக அமர்ந்து சத்துணவு சாப்பாடை சாப்பிட்டார். ஜார்க்கண்ட் மாநிலம் கிரதி மாவட்டம் மஞ்சிதி கிராமத்தில் உள்ள நடுநிலை பள்ளிக்கு கல்வித்துறை அமைச்சர் ஜகர்நாத் மஹத்தோ சென்றார். அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்ட அவர், மாணவர்களுடன் அமர்ந்து சத்துணவு உண்டார். பின்னர், மாணவர்களிடையே உரையாடி அவர்களுக்கு புத்தகங்கள், பேனாக்கள் ஆகியவற்றை வழங்கினார். சத்துணவின் தரத்தை உயர்த்த அமைச்சர் உத்தரவு பிறப்பித்ததாகவும் அரசு அலுவலர் ஒருவர் தெரிவித்தார். அமைச்சர் ஜகர்நாத் மஹத்தோ […]

Categories
தேசிய செய்திகள்

5 ஆண்டுகளுக்கு பின்…. ”பொது விடுமுறை தினம்”… ஜார்கண்ட் அரசு அறிவிப்பு ..!!

விடுமுறை தின பட்டியலில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் நீக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23ஆம் தேதியை மீண்டும் பொது விடுமுறை தினமாக ஜார்கண்ட்  மாநில அரசு அறிவித்தது . ஜார்கண்ட் மாநிலத்தில் நேதாஜி பிறந்த நாளை கடந்த 2014ஆம் ஆண்டு வரை விடுமுறை தினமாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையில் இந்த தினம் பொது விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பிரான்சில் […]

Categories
தேசிய செய்திகள்

மோடியை வியக்கவைத்த கிராமங்கள்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள இரு கிராமங்கள் பிளாஸ்டிக் ஒழிப்பில் பிரதமர் மோடியின் பாராட்டுகளை பெற்று நாட்டுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் ஆரா, கெரம் ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. நீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் பல பாராட்டுகளை தக்கவைக்க முயற்சிகளை இந்த கிராமங்கள் மேற்கொண்டுவருகிறன. இந்த முன்மாதிரியான முயற்சிக்கு பிரதமர் மோடியும் பாராட்டுகளை தெரிவித்தார். ஒர்மன்ஜி தொகுதியில் அமைந்துள்ள இந்த இரண்டு கிராமங்கள் பிளாஸ்டிக் இல்லா சமூகத்தை உருவாக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

ஜார்க்கண்ட் முதலமைச்சராகப் பதவியேற்றார் ஹேமந்த் சோரன்..!!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11ஆவது முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில், முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் முடிவுகள் டிசம்பர் 23ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆளும் பாஜகவை எதிர்த்து போட்டியிட்ட ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் – ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி 47 இடங்களைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரனின் மகன் […]

Categories
தேசிய செய்திகள்

ஜார்க்கண்ட் முதலமைச்சர் பதவி ஏற்பு விழா… ஆறு முதலமைச்சர்கள், ஸ்டாலின் பங்கேற்பு..!!

ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதலமைச்சராகப் பதவியேற்கும் விழாவில், ஆறு மாநில முதலமைச்சர்கள், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் முடிவுகள் டிசம்பர் 23ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆட்சி அமைப்பதற்கு 41 தொகுதிகள் தேவைப்பட்ட நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் – ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி 47 தொகுதிகளில் வென்றது. இதனைத் தொடர்ந்து அம்மாநில முதலமைச்சராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா […]

Categories
தேசிய செய்திகள்

சோனியா, ராகுலை சந்தித்த ஹேமந்த் சோரன்..!!

ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி (ஜே.எம்.எம்.) தலைவர் ஹேமந்த் சோரன், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். ஜார்க்கண்ட் சட்டபேரவைத் தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஜார்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன், டிச.29ஆம் தேதி பதவியேற்கிறார். இந்நிலையில் இன்று அவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அப்போது தனது பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அவருக்கு அழைப்பு […]

Categories
தேசிய செய்திகள்

“வாய்ப்பளித்த ஜார்கண்ட் மக்களுக்கு நன்றி” – நரேந்திர மோடி

பல ஆண்டுகளாக பாஜகவை சேவைபுரிய வாய்ப்பளித்த ஜார்கண்ட் மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் ஐந்து கட்டங்களாக நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜெஎம்எம்) -காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி கண்டுள்ளது. இதையடுத்து, ஜெஎம்எம் கட்சித் தலைவர் ஹேமந்த் சூர் அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இவருக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், பிரதமர் மோடியும் தனது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஜார்கண்ட் முதலமைச்சர் ரகுபர் தாஸை முந்தும் ராய்..!!

ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் முதலமைச்சர் ரகுபர் தாஸ் வெற்றிபெறுவதில் கடும் சவால் நிலவுவதாகக் கூறுகின்றன. ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்துவருகிறது. ரகுபர் தாஸ் முதலமைச்சராக உள்ளார். இவர் ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் களம் காண்கிறார். இந்தத் தொகுதி பாஜகவின் கோட்டையாகக் கருதப்படுகிறது. ஆகவே இங்க நின்றால் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நோக்கத்தில் ரகுபர் தாஸ் இந்தத் தொகுதியை தேர்ந்தெடுத்தார். அவருக்கு எதிர்ப்பு உள்கட்சியிலேயே கிளம்பியுள்ளது. அவரை […]

Categories
தேசிய செய்திகள்

”பறிபோகும் பாஜக ஆட்சி”ஜார்கண்ட் மாநில முடிவு இதான் ….!!

காங்கிரஸ் – ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் ரகுபர் தாஸ் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்றுவருகிறது. இதன் ஆட்சிக் காலம் டிசம்பர் 27ஆம் தேதியோடு முடிவடைவதால் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 30, டிசம்பர் 7, டிசம்பர் 12, டிசம்பர் 16, டிசம்பர் 20 ஆகிய தேதிகளில் ஐந்து கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 23ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

ஜார்கண்ட் தேர்தல்: 309 வேட்பாளர்களின் விதியை தீர்மானிக்கும் 56 லட்சம் வாக்காளர்கள்..!!

ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று (டிச.12) மூன்றாம் கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 309 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்துக்கு மொத்தமுள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளில் 17 தொகுதிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) மூன்றாம் கட்டமாக தேர்தல் நடக்கிறது. 309 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.அவர்களில் 32 பேர் பெண்கள். 17 தொகுதிகளில் இரண்டு தொகுதிகள் பழங்குடியினர் மற்றும் பட்டியலின மக்களுக்கான தொகுதிகளாகும். தேர்தல் அமைதியாக நடைபெறும்பொருட்டு 40 ஆயிரம் பாதுகாப்பு படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். 626 […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

ஜார்கண்ட் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கான தேர்தல்: 3 ஆம் கட்ட வாக்குபதிவு தற்போது தொடங்கியது. ஜர்காண்ட் சட்டப்பேரவைக்கான தேர்தல் 5 கட்டங்களாக நடைப்பெற்று வருகின்றன. இன்று 17 தொகுதிகளுக்கு 3 ஆம் கட்ட வாக்குபதிவு தொடங்கியுள்ளது. இதில் 12 தொகுதிகள் மாவேஸ்யிஸ்ட் அச்சுறுத்தல் உள்ள தொகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த தொகுதிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர், துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

அடித்துக் கொண்ட CRPF வீரர்கள்….. ஜார்கண்ட்டில் பரபரப்பு….. மரணத்தில் முடிந்தது….!!

மத்திய ஆயுத காவல்படை வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. இதில் இரண்டு கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள மூன்று கட்ட தேர்தலுக்காக மத்திய ஆயுதக் காவல்படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பொகாரோ பகுதியில் உள்ள சார்லி என்ற நிறுவனத்தில் 226ஆவது படாலியன் வீரர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு இடையே நேற்று இரவு திடீரென எதிர்பாராவிதமாக ஏற்பட்ட மோதலில் இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

கெத்தா நடந்து வாரான்….. GUN_னோட சுத்தி வாரான்…..வாக்குச்சாவடியில் பரபரப்பு ..!!

பாஜகவினர் நடத்திய போராட்டத்தால் தன்னை தற்காத்துக் கொள்ள காங்கிரஸ் வேட்பாளர் வாக்குச்சாவடி அருகே கையில் துப்பாக்கி எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஜார்க்கண்டில் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு ஆறு மாவட்டங்களின் 13 தொகுதிகளுக்கு இன்று காலை தொடங்கப்பட்டது. இந்நிலையில், சைன்பூர் தொகுதியின் வாக்குச்சாவடி ஒன்றில் தல்தோகாஞ் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் கே.என். திருப்பதிக்கு எதிராக பாஜகவினர் கண்டன கோஷங்களை எழுப்பி கல்வீச்சு தாக்குதலிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் முன்னேறி செல்வதை அவர்கள் தடுக்க […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஜார்க்கண்டில் பிரதமர் மோடி இன்று பரப்புரை ….!!

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தல்டான்காஞ், கும்லா ஆகிய நகரங்களில் பரப்புரை ஆற்றியுள்ளார். மகாராஷ்டிரா, ஹரியானாவைத் தொடர்ந்து ஜார்க்கண்ட்டில் நவம்பர் 30, டிசம்பர் 6, 12, 16, 20 என ஐந்து கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் அனல் பறக்க பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, ஆளும் பாஜக சார்பாக பிரதமர் மோடி இன்று தல்டான்காஞ், கும்லா ஆகிய நகரங்களில் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். இதுதொடர்பாக ஜார்க்கண்ட் மாநில பாஜக அதன் ட்விட்டர் பக்கத்தில், […]

Categories
தேசிய செய்திகள்

நக்சலைட்டுகள் திடீர் தாக்குதல்.. 4 காவலர்கள் உயிரிழப்பு.!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய துப்பாக்கி தாக்குதலில் காவல் துறையைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 30 ஆம் தேதி முதல் ஐந்து கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் லதேஹர் மாவட்டத்தில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது காவல் துறையினர் மீது நக்சலைட்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதனால் காவல் துறையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் உதவி ஆய்வாளர், […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

சுரங்க வெடி பொருள் ஆராய்ச்சி மையத்தில் B.SC பட்டதாரிகளுக்கு வேலை …..!!

ஜார்கண்ட் மாநிலம் “Dhanbad”_ல் உள்ள CSIR – Central Institute of Mining And Fuel Research-ல் கீழ்க்கண்ட பணிகளுக்கு தேவையான பள்ளிகளுக்கு தேவையான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம் பணியின் பெயர் : Pro-ject Assistant காலிப்பணியிடங்கள் :  25 உதவி தொகை : 15,000 கல்வித்தகுதி : Chemistry / Geology பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது mechanical engineering_ல் டிப்போ மொபைல் தேர்ச்சி […]

Categories
தேசிய செய்திகள்

“மின்னல் தாக்கி 51 பேர் பலி” பீகார் மற்றும் ஜார்கண்டில் சோகம் ….!!

பீகார் மற்றும் ஜார்கண்டில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்கள்  எணிக்கை 51_ஆக அதிகரித்துள்ளது என்று தகவல் தெரியவந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களான பீகார் , ஜார்க்கண்டில் தொடர்ந்து சில வாரங்களாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். பீகாரில் மழையுடன்  இடி, மின்னல் தாக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்  5 பேர் காயமடைந்துள்ளதாகவும்  பீகார் […]

Categories
தேசிய செய்திகள்

“மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கி சண்டை” ராணுவ வீரர் ஒருவர் பலி…!!

ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஜார்க்கண்டின் தும்கா பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு வந்த ராணுவ வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.  இந்த நிலையில், அங்கிருந்த மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான  துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இந்த துப்பாக்கி சண்டையில்  ராணுவ வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும்  4 வீரர்கள் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த வீரர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கி சண்டையில் காயமடைந்துள்ள […]

Categories

Tech |