Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் வேலை இருக்கு… பார்வையாளர்களுக்கு தடை… பொதுப்பணித் துறையின் அறிவிப்பு…!!

ஜெயலலிதா நினைவிடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 27ஆம் தேதி எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே மறைந்த முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவிற்கு கட்டப்பட்ட நினைவிடமானது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதனையடுத்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஜெயலலிதா நினைவிடத்தை சென்று பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் பொதுப்பணித்துறை பொதுமக்கள் ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, பராமரிப்பு பணிகளுக்காக ஜெயலலிதா நினைவிடம் […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா சொத்துகளுக்கு தீபா, தீபக்கை இரண்டாம் நிலை வாரிசுகள் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஜெயலலிதா சொத்துகளுக்கு தீபா, தீபக்கை இரண்டாம் நிலை வாரிசுகள் என உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு பல கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. ஹைதராபாத் திராட்சை தோட்டம், பங்களா, சென்னை போயஸ் தோட்ட இல்லம், கொடநாடு எஸ்டேட் என ரூ.1,000 கோடிக்கும் அதிகமான சொத்துகள் உள்ளன. இந்த நிலையில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் சொத்துகளை நிா்வகிக்க ஒரு நிா்வாகியை நியமிக்கக் கோரி சென்னை கேகே நகரை சேர்ந்த புகழேந்து மற்றும் ஜானந்தன் […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பிப்பு!

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்ற அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலமாக போயஸ் கார்டன் வேதா நிலையத்தில் உள்ள பொருட்களை அரசுடமையாக்க வழிவகை செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அவர் வாழ்ந்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள ‘வேதா இல்லத்தை அவரது நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டது. இதற்காக நிதியும் ஒதுக்கீடு செய்தது. கடந்த 2017ம் […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் 7வது முறையாக நீட்டிப்பு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தின் காலத்தை 7வது முறையாக நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை கடந்த 2017ம் ஆண்டு தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டது. இதுதொடர்பாக ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், அமைச்சர்கள் என 150க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் இதுவரை விசாரணை நடத்தியுள்ளது. மேலும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவர்கள் உள்பட அரசு அதிகாரிகள் பலரிடம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக அரசின் இலவச லேப்டாப் எப்ப வரும்னு தெரியுமா…??

3 மாததிற்குள் இலவச மடிக்கணனி வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் . தமிழகத்தின் கடந்த மாநிலங்களவை தேர்தலின்  வாக்குறுதியாக பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு அதிமுக சார்பில் இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன் படி ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு  இலவச மடிக்கணினி ஆனது வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2017-18 ஆம் கல்வியாண்டில் படித்து முடித்த மாணவர்களுக்கு தற்பொழுது […]

Categories
அரசியல்

ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கை தேதி குறிக்காமல் தள்ளி வைத்தது உயர்நீதிமன்றம்

முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களது மரணத்தில் மர்மம் உள்ளதாக எழுந்த வழக்கில் இன்று விவாதமானது நடைபெற்றது இந்த விவாதத்தில் எப்படி அப்போலோ மருத்துவம் ஒரு அரசியல் தலைவருக்கு சரியான சிகிச்சை செய்யவில்லை என்று குறை கூறலாம் என்று அப்போலோ தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.. மாண்புமிகு முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் இது குறித்து அப்போலோ மருத்துவமனை விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அதற்கு என்று […]

Categories

Tech |