பட்டபகலில் மர்ம நபர்கள் பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திக்குறிச்சி இளம் துருத்திவிளையில் தொழிலாளியான அருள்தாஸ் என்பவர் பிந்து என்ற தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பிந்து பக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் பால் வாங்குவதற்காக நடந்து சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரை வழி மறித்துள்ளனர். இதனையடுத்து அந்த மர்ம நபர்கள் பிந்துவின் தங்க சங்கிலியை பறிக்க முயன்ற போது […]
