நடிகை ஜெனிலியா தான் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து விட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கொரனோ பாதிப்பைத் கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்தியாவில் இதனுடைய மொத்த பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் சாதாரண அப்பாவி ஏழை மக்கள், பணக்காரர்கள் என்ற பாரபட்சம் பார்க்காமல் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என அனைத்து வகையினரையும் தொடர்ந்து தாக்கி வருகிறது. […]
