காஷ்மீரில் தங்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் காஷ்மீர் பண்டிதர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஷ்மீர் பண்டிதர்கள் 1990ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் தேதி, அகதிகளாகத் துரத்தப்பட்டனர். அந்தத் துயரத்தை அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நினைவுபடுத்துவார்கள். அந்த வகையில் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தாங்கள் காஷ்மீர் திரும்ப தயாராகவுள்ளதாக முழக்கமிட்ட போராட்டக்காரர்கள், அங்கு நடந்துவரும் பயங்கரவாத செயல்களுக்கு […]
