ஐடி வேலை பார்க்கும் பெண் ஒருவர், தனது ஒப்பந்தம் முடியவுள்ளது என்ற மனஅழுத்ததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ராய்துர்காம் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி வேலை செய்து வந்தவர் ஹரினி(24). இவர் இரண்டு வருட ஒப்பந்தத்தில் ஐடி வேலை செய்து வந்தார். சில நாட்களுக்குள் இவரது ஒப்பந்தம் முடியவுள்ளதாக நிறுவனம் சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஒப்பந்தம் கிடைக்கவில்லை என்றால் வேலை போய்விடும் என்பதால் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். […]
