காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் தான் பேசிவருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார கூட்டமைப்பு மாநாடு நேற்று நடைபெற்றது. அதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அங்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்தார். அப்போது பேசிய ட்ரம்ப், காஷ்மீர் கள நிலவரத்தை தான் தொடர்ச்சியாக கவனித்து வருவதாகத் தெரிவித்தார். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா – பாகிஸ்தான் உறவு மேம்பட எந்தவிதமான […]
