உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் இடத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து ராமர் கோவிலை கட்ட மத்திய அரசு சார்பில் அறக்கட்டளை ஒன்றும் அமைக்கப்பட்டது. மேலும் ராமர் கோவில் கட்டும் பணிகளை உத்திரப்பிரதேச பாஜக அரசு முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் ஐந்தாம் தேதி […]
