சந்திராயன்-2 விண்கலம் தாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு சென்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சந்திராயன் 2 விண்கலத்தை சுமார் ரூ 978 கோடி ரூபாய் செலவில் வடிவமைத்தது. ஜூலை 22 ஆம் தேதி மதியம் 2.43 மணி அளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இதையடுத்து புவி வட்டப்பாதையில் சுற்றி வந்த சந்திராயன்-2 அவ்வவ்போது […]
