தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் வரும் 25ஆம் தேதி தீவுத்திடலில் தீ இல்லாத சமையல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை சிறப்பாக நடத்திவருகின்றது. இதன் தொடர்ச்சியாக 46ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை முதலமைச்சர் டிசம்பர் 22ஆம் தேதி தொடங்கி வைத்தார். சுற்றுலாப் பொருட்காட்சியில் மாநில அரசின் ஆக்கப்பூர்வ […]
