கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின்போது தன்னுடைய பேட்டிங்கால் தோனியை கடுப்பாக்கினேன் என்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு நடைபெற இருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் உலகெங்கிலும் பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் மற்றும் பிற விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் பலரும் சமூக வலைதளம் […]
