விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு சம்பவம் தொடர்பாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். ஆலோசனையை தொடர்ந்து, விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு தொடர்பாக ஆந்திர முதல்வருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என பிரதமர் உறுதி அளித்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 2,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். […]
