பாதத்தில் எரிச்சல் உண்டாக காரணம் என்ன..? அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்துவது: “வாழ்வியல் நோய் பாதிப்புகள் இருப்பவர்களுக்கு ஏற்படும் மிகமுக்கியமான அறிகுறிகளில் ஒன்று, பாத எரிச்சல். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளுக்குப் பாத எரிச்சல் பிரச்னை இருக்கும். உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகமானால், நரம்புகள் பாதிக்கப்பட்டு பாத எரிச்சல் ஏற்படும். எரிச்சல் ஏற்படுவதற்கு முன், உணர்ச்சியற்று இருப்பது, கூச்சம் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்று, ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். […]
