நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு மாதா வைஷ்ணவ தேவி கோவிலுக்கு செல்வதற்கான சிறப்பு சுற்றுலா திட்டத்தை ஐ ஆர் சி டி சி அறிமுகம் செய்துள்ளது.மொத்தம் ஐந்து நாட்கள் கொண்ட இந்த திட்டத்தில் செப்டம்பர் 30ம் தேதி டெல்லியில் உள்ள சப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து ரயில் புறப்படும். இந்த சுற்றுலாவுக்கு 11,990 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். உணவு மற்றும் தங்குமிடம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். பக்தர்கள் தனி அறையில் தங்க வேண்டும் என்றால் ரூ.13,790 கட்டணமாகச் செலுத்த வேண்டும். […]
