ஈரான் படைகளை குறிவைத்து இஸ்ரேல், சிரியாவில் வான்வழி தாக்குதலை நடத்திவருகிறது. சிரியாவில் உள்ள ஈரான் படைகளைக் குறிவைத்து ஏவுகணைகளைப் பயன்படுத்தி இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் நகரில் பயங்கரமான வெடி சத்தம் கேட்டு அச்சமடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியேறினர். நாட்டில் இருந்தபடியே ஏவுகணைகளை அனுப்பி மூன்று தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளதாக சிரியா நாட்டு மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஈரான் படைகளை குறிவைத்து நூற்றுக்கணக்கான வான்வழி […]
