ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ காயமடைந்துள்ளதால் நாளை நடக்கும் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டாரென்றும், அதோடு அணியில் சில மாற்றங்கள் ஏற்படுவதாக இருக்கிறது. ஐ.பி.எல் தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை அணி எதிர்கொண்ட 4 போட்டிகளில், முதல் 3 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. மும்பை அணியுடன் நடந்த 4 வது போட்டியில் தோல்வியைச் சந்தித்தது. இந்த 4 போட்டியிலும் தொடக்க ஆட்டக்காரர்கள் அம்பத்தி ராயுடுவும், ஷேன் வாட்ச னும் சொல்லும் அளவிற்கு பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. நடந்து முடிந்த 4 போட்டிகளில் அம்பத்தி ராயுடு, எடுத்த ரன்கள், […]
