மூதாட்டியிடம் இருந்து தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அகினேஸ்புரம் நடுத்தெருவில் பெரியநாயகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மேரி தனது வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மேரியின் காதில் அணிந்திருந்த தங்க கம்மலை அறுத்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் அலறி சத்தம் போட்ட மூதாட்டியை அருகில் உள்ளவர்கள் […]
