சதுரகிரி மலைக்குள் அத்துமீறி நுழைந்து வன விலங்குகளை துன்புறுத்திய வாலிபருக்கு வனத்துறையினர் 70,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் மலைப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இந்தநிலையில் மலைக்குள் வன விலங்குகளை வேட்டையாடுவதாக சாப்டூர் வனச்சரக அலுவலர் சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையில் வனத்துறையினர்கள் அப்பகுதிக்குள் ரோந்து பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, அணைக்கரைபட்டியைச் சேர்ந்த பாக்யராஜ் என்ற வாலிபர் டிராக்டர் மூலம் மணல் […]
