இளைஞரின் செல்ஃபோனை பறித்து வைத்துக் கொண்டு, காவல் நிலையம் வரவழைத்து இளைஞர்களை மிரட்டிய பெண் உதவி ஆய்வாளரின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் உத்தராம்பாள். இவர் பணி முடிந்து புதுச்சேரியை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் முன்பாக இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் செல்ஃபோனில் பேசிக்கொண்டே சென்றுள்ளார். இதனைக் கண்ட உத்தராம்பாள் அந்த இளைஞரை வழிமறித்து செல்ஃபோனை […]
