அரசின் தடையை மீறி சாலையில் விநாயகர் சிலை வைத்து வழிபட்ட இந்து முன்னணியினரிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் இருக்கும் பழைய பேருந்து நிலையம் அருகாமையில் விநாயகர் சிலை வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதை மீறி இந்து முன்னணி மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர். இதில் 51 நபர்களுக்கும் அதிகமானோர் தேங்காய்களை சூறையிட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]
