ஸ்பெயினைச் சேர்ந்த நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால், உலக டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு நேற்று டென்னிஸ் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரபேல் நடால் 9 ஆயிரத்து 585 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தில் இருந்த அவர் செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச்சை பின்னுக்குத் தள்ளியுள்ளார். உலக தரவரிசையில் நடால் முதலிடம் பிடிப்பது இது எட்டாவது முறையாகும். இந்த தரவரிசையில் […]
