வலிப்பால் துடித்த தனது எஜமானரை சாதுரியமாக காப்பாற்றிய வளர்ப்பு நாயை அனைவரும் பாராட்டிய வண்ணம் உள்ளனர். அமெரிக்காவில் நியூஜெர்ஸி மாகாணத்தில் பிரைன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விலங்குகள் காப்பகத்தில் இருந்து ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். இந்த நாயின் முதல் உரிமையாளர் வேறு மாகாணத்திற்கு இடம்பெயர்ந்த போது சேடி என்று அழைக்கப்பட்ட இந்த நாயை விலங்குகள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து தன் உரிமையாளரை பிரிந்து தவித்து வந்த இந்த நாயை பிரைன் […]
