ரூபாய் 381 கோடியே 76 லட்சத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டு வரும் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினரான பொன் கௌதமசிகாமணி நேரில் ஆய்வு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் கட்டுவதற்காக ரூபாய் 381 கோடியே 76 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்தப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினரான பொன் கவுதமசிகாமணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தியுள்ளார். இதில் மண் பரிசோதனை சான்று முறையாக பெற்றுள்ளதா, […]
