கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஐஎஸ்எல் கால்பந்து இறுதி போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 70கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய அரசு பல்வேறு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கொரோனா வைரஸ் காரணம் மக்கள் […]
