மூதாட்டியின் காதை அறுத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரலிங்கபுரம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரின் தந்தையான சேது ராமலிங்கம் இறந்துவிட்டதால், இவரின் தாயார் மனோன்மணி ராமசாமியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் மனோன்மணியின் இரண்டு காதுகளையும் அறுத்து அவர் அணிந்திருந்த கம்மலை திருடி விட்டு சென்றனர். இதனால் வலி தாங்க முடியாமல் […]
