கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் வேலைக்கு செல்வதற்கு அனுமதிக்கும் நோய் எதிர்ப்புச்சக்தி சான்றிதழ் வழங்கும் யோசனைக்கு எதிராக உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசின் பிடியில் உலகம் முழுக்க 28 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7,89,000 பேர் தீவிர சிகிச்சைக்கு பின் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இப்படி வீட்டுக்கு திரும்பிய பலரும் சில நாட்கள் […]
