தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே வீட்டின் மேற்கூரை விழுந்ததில் இளைஞர் ஒருவர் பலத்த காயமடைந்தார். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் வடக்கு மயிலோடை அருகேயுள்ள இந்திரா காலனியை சேர்ந்தவர் பால்ராஜ். கூலித் தொழில் செய்துவரும் இவரும், இவரது மனைவியும் சம்பவதினத்தன்று வேலைக்குச் சென்றுள்ளனர். வீட்டில் மாற்றுத்திறனாளியான பால்ராஜின் மகன் மகாராஜன்(20) தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென வீட்டின் மேற்கூரை விழுந்ததில் மகாராஜனின் தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டது. மேலும், வீட்டில் இருந்த மின்சாதன பொருள்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. காயமடைந்த மகாராஜன் கயத்தாறு […]
