உலகின் தலைசிறந்த அணிகளையும் வெல்லக்கூடிய அணியாக வங்கதேச கிரிக்கெட் அணி முன்னேறியுள்ளது என இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இந்தியா – வங்கதேசம் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று டெல்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இதனிடையே நேற்றைய பயிற்சிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “டி20 போட்டிகளைப் பொறுத்தவரையில் எதிரணிக்கு எதிராக நமது அணியின் யுக்தி, திட்டம் மற்றும் நமது அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களால் […]
