Categories
உலக செய்திகள்

வெள்ளை மாளிகையில் தீபம் ஏற்றிய ட்ரம்ப்…. இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்து.!!

தீபாவளி பண்டிகையையொட்டி அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும்விதமாக வெள்ளை மாளிகையில் தீபத்தை ஏற்றிவைத்த அதிபர் ட்ரம்ப், தீபாவளி திருநாளை அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வாழ்த்துக் கூறியுள்ளார். இதையொட்டி அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “அமெரிக்கா முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது நமது நாட்டின் மிக முக்கியக் கொள்கையான மத சுதந்திரத்தை பேணும்வகையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இந்திய மக்கள் தீபாவளி கொண்டாடும் காலம் மிகவும் […]

Categories
உலக செய்திகள்

தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பின் “மீண்டும் திறக்கப்படும் தேவாலயம்”

இலங்கை குண்டு வெடிப்பையடுத்து வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களில் பொதுப் பிரார்த்தனைக் கூட்டங்கள் மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 21.04.2019)-யில்  நடைபெற்ற ஈஸ்டர் திருவிழாவின் போது தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் என அடுத்தடுத்து  குண்டுவெடிப்பு  நிகழ்ந்தது.இந்த குண்டுவெடிப்புகளில் 11 இந்தியர்கள் உள்பட 42 வெளிநாட்டினர் உயிரிழந்துள்ளனர். மேலும்  253 பேர் உயிரிழந்தது உலகையே அதிர வைத்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூர தாக்குதலை நிகழ்த்தியதாக […]

Categories
உலக செய்திகள்

“இலங்கையே வேண்டாம்” இந்திய அரசு வேண்டுகோள்…!!

இலங்கைக்கு யாரும் செல்லவேண்டாம், கூடுமானவரை தவிருங்கள் என்று இந்திய  வெளியுறவுத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஈஸ்டர் திருவிழாவின் போது தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் என அடுத்தடுத்து  குண்டுவெடிப்பு  நிகழ்ந்தது. இந்த கொடூர தாக்குதலில் சுமார் 300_க்கும் அதிகமானோர்  உயிரிழந்தனர்.இந்த தாக்குதலை நடத்தியதாக IS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இதையடுத்து நேற்று இலங்கையின் கல்முனையில் உள்ள  வீட்டில் 4 மனித வெடிகுண்டு பயங்கரவாதிகள் குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 4 பயங்கரவாதிகள் உள்பட 15 பேர் […]

Categories
உலக செய்திகள்

இந்தியர்கள் 11 பேர் சேர்த்து 36 வெளிநாட்டினர் பலி….. அறிக்கையை வெளியிட்டது இலங்கை…!!

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 11_ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் கொழும்பு நகரில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் கடந்த 21-ந் தேதி அடுத்தடுத்து என 8 குண்டுகள் வெடித்தது. இந்த கொடூர தாக்குதலுக்கு 359 பேர் பரிதாபமாக பலி ஆகினர். மேலும் 500_க்கும் அதிகமானோர்  காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலை நிகழ்த்தியது நாங்கள் தான் என்று IS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுகொண்டது. இந்த கொடூர தாக்குதல் தொடர்பாக இது வரை […]

Categories

Tech |