2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கபடி தொடர் பஞ்சாபில் டிசம்பர் 1 முதல் 9ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கபடி கூட்டமைப்பால் 2004ஆம் ஆண்டு முதல் உலகக்கோப்பை கபடி போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன. இதுவரை நடத்தப்பட்ட மூன்று தொடர்களிலும் இந்திய அணியே சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. மூன்று முறையும் இந்திய அணி இறுதிப்போட்டியில் ஈரான் அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, 2019 உலகக்கோப்பை கபடி போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை […]
