நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சீனாவில் இருந்து தொடங்கி தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை சீனாவில் 3000-த்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் இதுவரை 70க்கும் மேலான நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் இதுவரை 31 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய […]
