இது தோல்விக்கு சமமானதல்ல, விலைமதிப்பற்ற கற்றலுக்கான தருணம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பூமியிலிருந்து கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்டது. திட்டமிட்டபடி பூமியின் வட்டப்பாதையிலிருந்து சந்திரயான் 2 விண்கலம், ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி நிலவின் பாதைக்கு திருப்பி விடப்பட்டது. அதைத் தொடர்ந்து சந்திராயன் 2 விண்கலத்தின் வேகம் நிலவின் வட்டப்பாதையில் இருந்து படிப்படியாக குறைக்கப்பட்டது. அதன்பின் ஆகஸ்ட் 2ம் தேதி ஆர்பிட்டரிலிருந்து விக்ரம் லேண்டர் பிரிக்கப்பட்டது. இந்நிலையில் […]
