நடிகை டாப்சி நடிப்பில் உருவாகியுள்ள ‘தப்பட்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. நடிகை டாப்சி சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் நிறைந்த கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் முல்க் திரைப்படத்தைத் தொடர்ந்து அனுபவ் சின்ஹா இயக்கத்தில் அவர் நடித்துள்ள படம் ‘தப்பட்’. பூஷன்குமார், கிரிஷன் குமார், அனுபவ் சின்ஹா ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படம் வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கிடையில் நேற்று இப்படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலான நிலையில், இன்று படத்தின் ட்ரெய்லர் […]
