இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2.07 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,98,706ல் இருந்து 2,07,615 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,909 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 217 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4,775 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,00,303ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,815 ஆக உயர்ந்துள்ளது. […]
