ப.சிதம்பத்தை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவருக்கு 5 நாள் சிபிஐ காவல் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டிற்குள் கோட்டைச் சுவர் ஏறிக்குதித்து மடக்கி நேற்று கைது செய்து இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்து சென்று அவருக்கு தேவையான மருத்துவ உதவி , உணவு என அனைத்தையும் வழங்கியசிபிஐ ப.சிதம்பரத்திடம் இன்று காலை விசாரணை நடத்தியது. […]
