திருவள்ளுவர் குறித்து சர்ச்சைக்குரிய படத்தை வெளியிட்ட பாஜகவை சிதம்பரம் தன் ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். தமிழ்நாடு பாஜக தன் ட்விட்டர் பக்கத்தில் நவம்பர் 1ஆம் தேதி பதிவு ஒன்றை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக இட்ட அந்தப் பதிவில் காவி உடையணிந்து நெற்றியில் திருநீறு பூசியிருப்பது போல் திருவள்ளுவரின் படம் இருந்தது.இதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியிலுள்ள திருவள்ளுவர் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் கறுப்பு மை பூசியும் மாட்டுச் சாணத்தை வீசியும் சென்றனர். […]