தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 283 பேர் குணமடைந்துள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் . கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதேபோல மாநில அரசாங்கங்களும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமிருக்கிறது. […]
