அமமுக வேட்பாளர்களின் பெயரைருடன் கூடிய சுயேச்சை வேட்பாளர்களுக்கு 4 தொகுதிகளில் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. R.K நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றார். இதனையடுத்து நடைபெற உள்ள மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பொதுச் சின்னமாக குக்கர் சின்னத்தை அமமுக வேட்பாளர்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். உச்சநீதிமன்றம் வரை சென்ற டிடிவி தினகரனின் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதேசமயம் அமமுகவிற்கு பரிசுப்பெட்டி சின்னத்தை பொதுச் சின்னம் வழங்க […]
