ட்ரம்பின் ஆதரவாளர்கள் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட இருப்பதாக ஃபெடரல் பீரோ ஆஃ இன்வெஸ்டிகேஷன் விசாரணையில் தெரியவந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அதிபராகவும் கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் வெற்றி பெற்றுள்ளனர். இதனை அடுத்து ஜனவரி 20ஆம் தேதி ஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவி ஏற்க உள்ளனர். முன்னதாக ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதாக அமெரிக்கா நாடாளுமன்றத்தில் சான்றிதழ் வழங்க பட்ட போது ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு வன்முறையில் […]
