இலுப்பை மரத்தை அழிவிலிருந்து மீட்டு அதிகளவில் மரங்களை நட்டு பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசிற்கு இயற்கை நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மணல்மேடு மற்றும் அதனை சுற்றியுள்ள கீழாய், இழுப்பப்பட்டு, குறிச்சி, சுத்தமல்லி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட கிராமங்களில் இலுப்பை மரங்கள் தோப்புகளாகவும் தனித்தனி மரங்களாகவும் வளர்க்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தற்போது இந்த மரம் முற்றிலும் அழிந்து விடும் நிலையில் உள்ளது. இந்த மரம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னோர்களால் வளர்க்கப்பட்டு […]
